Tuesday, July 21, 2020

பாலகனே

பாலகனே!!!

   நல்லோர்க்கு நம் தொண்டு - சொல்

   நிற்பாரின் வழி கொண்டு - நற்

   பண்பாளர் மொழி உண்டு - செல்

   பாலகனே பகுத் துண்டு

                                                          - மதன்  mat_thoughts






பொருள்:

நல்லோர்க்கு நம் தொண்டு

நல்லவர்களுக்கு நம் உதவி போய் சேரவேண்டும்

 - சொல்
நிற்பாரின் வழி கொண்டு

சொன்ன சொல் மாறாத மக்களின் வழியை ஏற்றுக்கொண்டு

- நற்
பண்பாளர் மொழி உண்டு

நல்ல குணம் உள்ள மக்களின் அறிவுரைகளை மனதில் ஏற்றிக்கொண்டு

- செல்
பாலகனே பகுத் துண்டு

உன் பாதையில் சம உணர்வு கொண்டு செல் சிறுவனே

No comments:

Post a Comment