Wednesday, August 05, 2020

அறம் அறிவோம்

கற்றல் விற்றல் கசடில் உண்டாம்

கத்தும் களவும் கருவே வேண்டாம்

கருணை கனிவு இறையுள் துண்டாம்

பெருமை பொறுமை பயத்த லுண்டாம்

நன்மை செய்ய நாற்திசை உண்டாம்

இன்மை செய்தல் இன்றே வேண்டாம்

பணிவுடன் பழகல் அகழல் வேண்டாம்

பறைந்தன பழிந்தன நினைந்திடல் வேண்டாம்


                         -மதன்  mat_thoughts


பொருள்:

கற்றல் விற்றல் கசடில் உண்டாம்

நாம் கற்றுக்கொண்ட அறிவை விற்று பிழைப்பது  தவறான செயல்

கத்தும் களவும் கருவே வேண்டாம்

பொய் சொல்லுதலும் திருடுவதும் நமது கருவிலிருந்தே நீக்கப்பட வேண்டும்

கருணை கனிவு இறையுள் துண்டாம்

கருணையும் கனிவும் இறைவனின் ஒரு அங்கமே

பெருமை பொறுமை பயத்த லுண்டாம்

பொறுமையானது பெருமையை உருவாக்கக்கூடியது

நன்மை செய்ய நாற்திசை உண்டாம்

நாம் நன்மை செய்ய நான்கு திசைகளிலும் வாய்ப்பு இருக்கிறது அதை பயன்படுத்த வேண்டும்

இன்மை செய்தல் இன்றே வேண்டாம்

பிறருக்கு துன்பம் விளைவிக்கும் செயலை இன்றே விட்டுவிட வேண்டும்

பணிவுடன் பழகல் அகழல் வேண்டாம்

பிறரிடம் பணிவுடன் பழகுதலை என்றும் விட்டுவிட கூடாது

பறைந்தன பழிந்தன நினைந்திடல் வேண்டாம்

நாம் சொன்ன சொற்களையும் செய்த தவறையும் நினைத்து கொண்டு மன வருத்தத்துடன் இருக்க வேண்டாம்

No comments:

Post a Comment