Wednesday, July 22, 2020

நடைமுறை விளக்கம்


பொய்மை பரப்பப் பாடும் யுகம்

உயர்மை அமைந்த அற்பர் சகம்

அறம் அழிந்திட்ட நாட்டின் அகம்

ராகம் ஒழிந்திட்ட கானம் சுகம்


நல்வழி நடக்கும் நரனவன் நோக்கம்

பல்தொழிற்ச் சிந்தை பழகிடுந் தாக்கம்

புல்லினப் போக்கில் பொருந்திய தூக்கம்

வெல்வது நிகழ்வதில் புதுயுக ஆக்கம்


                                    - மதன் mat_thoughts 



பொருள்

பொய்மை பரப்பப் பாடும் யுகம்

உண்மையை பரப்புவதை விட பொய்மையை பரப்பவே இந்த உலகம் குறிக்கோளாக உள்ளது

உயர்மை அமைந்த அற்பர் சகம்

உயர்ந்த அறிவுடன் படைக்கப்பட்ட உள்ள முட்டாள் சகமனிதர்கள்

அறம் அழிந்திட்ட நாட்டின் அகம்

ஒழுக்க நெறிமுறைகள் அழிந்துவிட்ட நாட்டின் உள்ளே

ராகம் ஒழிந்திட்ட கானம் சுகம்

ராகமே இல்லாத பாட்டு கூட சுகமாத்தான் இருக்கும்

நல்வழி நடக்கும் நரனவன் நோக்கம்

நல்ல வழியில் தன் வாழ்க்கையை நடத்தும் மனிதனின் நோக்கம்

பல்தொழிற்ச் சிந்தை பழகிடுந் தாக்கம்

பல தொழில் பற்றிய அறிவு ஏற்படுத்தும் தாக்கம்

புல்லினப் போக்கில் பொருந்திய தூக்கம்

பறவை இனம் போன்ற சோம்பேறித்தனம் இல்லாமை

வெல்வது நிகழ்வதில் புதுயுக ஆக்கம்

மேற்கண்டவை வெற்றி பெறுவதில் தான் ஒரு புதிய உலகின் தொடக்கம் இருக்கிறது

No comments:

Post a Comment