Monday, August 03, 2020

சிவாய நம

ஆதிப் பொருளாய் அமைந்தோன் போற்றி

ஆறாத் திறனில் நிறைந்தோன் போற்றி

பித்தன் பிறையான் பாதம் போற்றி

பிறைமதி கொண்டை கொண்டோன் போற்றி

நாவோர் பாடப் பெற்றோன் போற்றி

நீல கண்டன் நாமம் போற்றி

சித்தம் முழுதும் சிறைத்தோன் போற்றி

நித்தம் நின்னை நினைவேன் போற்றி

                            - மதன் mat_thoughts


பொருள் :

ஆதிப் பொருளாய் அமைந்தோன் போற்றி

முதல் கடவுளாகியவனே போற்றி

ஆறாத் திறனில் நிறைந்தோன் போற்றி

தீராத சக்தி உள்ளவனே போற்றி

பித்தன் பிறையான் பாதம் போற்றி

சுந்தரரால் பித்தன் என்று பெயர் சூட்டப்பட்டவரே போற்றி

பிறைமதி கொண்டை கொண்டோன் போற்றி

தனது தலைமேல் பிறை நிலா கொண்டவனே

நாவோர் பாடப் பெற்றோன் போற்றி

நாக்கு உள்ள அனைவரும் புகழ்ந்து பாடப் பெற்றவனே

நீல கண்டன் நாமம் போற்றி

நீலகண்டன் ஆகிய உன்னுடைய நாமம் போற்றி

சித்தம் முழுதும் சிறைத்தோன் போற்றி

எனது உயிர் முழுவதையும் தனது அருளால் சிறைபிடித்து வைத்துள்ளவனே போற்றி

நித்தம் நின்னை நினைவேன் போற்றி

ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைத்து கொண்டிருப்பேன் போற்றி



No comments:

Post a Comment