Thursday, July 30, 2020

உறுதி கொள்


மயக்கம் தொடுத்த மனதை விடுத்தது

தயக்கம் தடுத்து தளத்தை எடுத்து

தரத்தை உயர்த்து, தலையை நிமிர்த்து

உரத்தை நிறைத்து அகத்தை வளர்த்து

                                  - மதன்    mat_thoughts 


பொருள்:

மயக்கம் தொடுத்த மனதை விடுத்தது

மற்ற விஷயங்களின் மேல் உள்ள ஈர்ப்பை மனதிலிருந்து விளக்க வேண்டும்

தயக்கம் தடுத்து தளத்தை எடுத்து

உன்னுடைய பாதையை தேர்வுசெய்வதில் உனக்கு இருக்கும் தயக்கத்தை தூக்கி எரிந்து விட்டு சரியான பாதையை தேர்வு செய்

தரத்தை உயர்த்து, தலையை நிமிர்த்து

நீ தேர்வுசெய்த பாதையில் சென்று சிறந்து விளங்கி, உன்னுடைய தரத்தை உயர்த்தி, தலை நிமிர்ந்து வாழ வேண்டும்

உரத்தை நிறைத்து அகத்தை வளர்த்து

இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை மனதில் நிறைத்து நீ உன்னை வளர்த்திக்கொள்ள வேண்டும்

--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment