Wednesday, August 05, 2020

பெண்


அண்டம் அதுகொண்ட திரு பால்

உண்ட துவை ஊட்டி தருவாள்

தீண்டகு தீயவள், சிறு உலகினுள்

வேண்டுதல் ஒன்றவள் வேர் ஊன்றல்


                                -மதன்   mat_thoughts


பொருள்:

அண்டம் அதுகொண்ட திரு பால்

இந்த அண்டத்தில் உள்ள பெருமைக்குரிய ஒரு பாலினம்

உண்ட துவை ஊட்டி தருவாள்

தான் உண்ட உணவை பாலை ஊட்டிக்குடுக்கக் கூடிய தாய்மை தகுதி பெரும் ஒரு இனம்

தீண்டகு தீயவள், சிறு உலகினுள்

வேலியற்று எவரும் தீண்டக்கூடிய ஒரு தீ போல இந்த சிறிய உலகில் உலவுகின்றவள்

வேண்டுதல் ஒன்றவள் வேர் ஊன்றல்


இந்த சிறிய உலகத்தில் அவள் வேண்டுகின்ற ஒரே வேண்டுதல் தனது சிறப்பையும் தனது பெயரையும் வேர் போல பதித்துச்செல்வதே



No comments:

Post a Comment