இவ்வுலகே இனியது எனினும் அதனில் இனிதென சிலவற்றை குறிப்பிட்டுள்ளேன்
நாட்டில் நல்லன நாட்டல் இனிது
கேட்டல் ஏட்டில் ஏற்றல் இனிது
காண்பன கனிவென கருதல் இனிது
உண்மை துணிவுற உரைத்தல் இனிது
உள்ளன உள்ளூர ஒப்புதல் இனிது
கள்ளம் பேனா காமம் இனிது
நன்றி தீரா நரமே இனிது
நான்மறை நெகிழ நடத்தல் இனிது
முன்னோர் முன் நிறுத்தல் இனிது
முன்னும் பின்னும் நினைத்தல் இனிது
பொன்னும் பொருளும் அளத்தல் இனிது
இன்னும் வேண்டல் இழிதல் இனிது
சொல்லும் செயலும் பிணைத்தல் இனிது
எல்லாம் அறிவேன் அழித்தல் இனிது
கண்டன உண்டென உணர்தல் இனிது
உணர்ந்தன உயிரென பெயர்தல் இனிது
-மதன் mat_thoughts
No comments:
Post a Comment